வீதி அபிவிருத்தி அதிகாரசபை (வீதி அபிவிருத்தி அதிகாரசபை), 1981ஆம் ஆண்டின் 73ஆம் இலக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை (வீதி அபிவிருத்தி அதிகாரசபை) சட்டத்தினால் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் நியதிச்சட்ட நிறுவனமாக கூட்டிணைக்கப்பட்டு, 1986ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைகள் திணைக்களத்திற்கு பின்னுரிமையாளரானது. அதைத் தொடர்ந்து வீதி அபிவிருத்தி அதிகாரசபை (வீதி அபிவிருத்தி அதிகாரசபை) தேசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பைப் பராமரிக்கும் மற்றும் தரம் உயர்த்தும் பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை (வீதி அபிவிருத்தி அதிகாரசபை) நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதோடு, இலங்கையின் நெடுஞ்சாலைகள்துறையில் உயர்ந்த நிறுவனமாகத் திகழ்கிறது.
2023ஆம் ஆண்டின் இறுதியில் உள்ள பதிவுகளின்படி தேசிய நெடுஞ்சாலைகள்வலையமைப்பைப்பு 12,255.41கிமீ முக்கிய பாதைகள் (A வகுப்பு) மற்றும் பிரதான (B வகுப்பு)பாதைகளையும் 312.59கிமீ அதிவேக பாதைகளையும் சுமார் 4,270 பாலங்களையும் கொண்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை தேசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி பணிகளுக்குப் பொறுப்பாக இருப்பதோடு, திட்டமிடல், வடிவமைத்தல ; மற்றும் புதிய பாதகைளையும் பாலங்களையும் நிர்மாணித்தல் மற்றும் ஏற்கனவே இருக்கின்ற பாதை வலையமைப்புக்கு அதிவேக பாதைகளை அகலப்படுத்தி பெரிதாக்குதல் ஆகிய பணிகளுக்கும் பொறுப்பாகச் செயற்படுகிறது.
மேலும் அறிக